Asianet News TamilAsianet News Tamil

கைலாசா நாட்டு குடிமகனாக அழைப்பு விடுக்கும் நித்யானந்தா... அழகான இளம்பெண்களுக்கு முன்னுரிமை..!

நித்தியானந்தா தனியாக அமைத்துள்ள கைலாசா நாட்டின் குடிமகனாக  மாற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 

Nithyananda has been called to become a citizen of the Kailasa country he has set up alone
Author
Tamil Nadu, First Published Dec 2, 2019, 6:29 PM IST

நித்தியானந்தாவின் புதிய நாட்டிற்கு செல்வதற்கு இந்துவாக இருப்பதே தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நித்யானந்தா நாட்டிற்கான தேசிய பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம் என ஒருநாட்டுக்கு தேவையான அனைத்தையும் அந்த இணையத்தில் நித்தி குரூப்பினர் பட்டியலிட்டுள்ளார்கள். தனிநாட்டுக்கென பாதுகாப்பு, கல்வித்துறை, வர்த்தகம், சுகாதாரத்துறை உள்பட 9 துறைகள் பிரிக்கப்பட்டுள்ளன.Nithyananda has been called to become a citizen of the Kailasa country he has set up alone

முத்திரையாக நித்யானந்தா பீடத்துக்கு கீழே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோக நித்தி நாட்டிக்கு குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக இரண்டு கலரில் பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு அதற்கான தகுதியையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பமும் அந்த வெப்சைட்டிலேயே கிடைக்கிறது. Nithyananda has been called to become a citizen of the Kailasa country he has set up alone

கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே ஆரம்பிக்கப்பட்டு செயல்படும் கைலாசா நாட்டிற்கான இணையதளத்தில், இந்துக்கள் அனைவரும் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மதத்தை பின்பற்ற விரும்புபவர்களும் அடங்குவார்கள். இதில் ஹைலைட் துன்புறுத்தப்பட்ட எந்த இந்துக்கும் கைலாசா ஒரு பாதுகாப்பான அடைக்கலம் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

 Nithyananda has been called to become a citizen of the Kailasa country he has set up alone

அனைத்து புலம்பெயர்ந்த இந்துகளும் கைலாசாவுக்கு வரலாம் என நித்யானந்தா அழைப்பு விடுத்துள்ளார். கைலாசாவின் ஆன்மீக குடிமகனாக மாற வேண்டுமா? இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் https://kailaasa.org/join-kailaasa/ ஒருவேளை அழகான பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். அட, ஆமாங்க. அது நித்யானந்தா நாடாயிற்றே...
 

Follow Us:
Download App:
  • android
  • ios