தற்கொலைப்படை தாக்குதல்... கால்பந்து ரசிகர்கள் 30 பேர் உடல் சிதறி உயிரிழப்பு...!

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Nigeria suicide attack... 30 people kills

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Nigeria suicide attack... 30 people kills

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகளுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள கொண்டுகா பகுதியில் கால்பந்து ரசிகர்கள் சிலர் ஒன்றுகூடி போட்டியை தொலைக்காட்சியில் நேற்று பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் 4 தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள் என்றும் ஒருவர் ஆண் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Nigeria suicide attack... 30 people kills

சிறிது நேரத்தில் அந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு போகோஹராம் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios