கோர விபத்து... பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்... 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

நைஜீரியாவில் பேருந்தும்- லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடல்கருகி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Nigeria bus accident... 19 people killed

நைஜீரியாவில் பேருந்தும்- லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடல்கருகி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.Nigeria bus accident... 19 people killed

நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் உள்ள அக்குரே-ஓவோ விரைவு நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை சுமார் 4 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. லாரி மோதிய விபத்தில் பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. Nigeria bus accident... 19 people killed

பேருந்தில் தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியதால் அலறி துடித்த படியே  20-க்கும் மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைவதற்குள் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios