கட்டுப்பாட்டு அறையின் கட்டளையை விமானி மீறியதே விபத்துக்கு காரணம்...!

Nepals Plane Crash 49 dead
Nepals Plane Crash; 49 dead


நேபாள தலைநகர் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேச பயணிகள் விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கியதில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

Nepals Plane Crash; 49 dead

வங்கதேச தலைநகர் டாக்கவில் இருந்து 67 பயணிகள் மற்றும் 4 விமான பணிக்குழுவினர் 71 பேருடன், யு.எஸ். பங்க்ளா ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டு வந்தது. அங்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது.  விமான ஓடுதளத்தை விமானம் அடையும் முன், ஓடுதள மைதானம் அருகே உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.  

Nepals Plane Crash; 49 dead

20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விமான விபத்து காரணமாக காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. காத்மண்டு திரிபுவன் சர்வதேச
நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Nepals Plane Crash; 49 dead

விமானம் விழுந்தவுடன் தீ பற்றியதே அதிகமான உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. விமானத்தை தென் பகுதியில் தரையிறக்கச் சொல்லியே விமான ஓட்டிக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஆனால், கட்டுப்பாட்டு அறையின் கட்டளையை மீறிய விமானி, விமானத்தை வடக்குப் பகுதியில் தரையிறக்கியுள்ளார். கட்டளையை மீறி, எதற்காக
இவ்வாறு தரையிறக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios