6 மாதங்களில் 600 பெண்கள் கதற கதற கற்பழிப்பு! எங்கு தெரியுமா?
வங்கதேசத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 600 பெண்களும் சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வங்கதேசத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 592 பெண்களும், சிறுமிகளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியிருப்பதாக, பங்களாதேஷ் மகிளா பரிசத் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.98 பெண்களும், சிறுமிகளும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், 29 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 61 பேர் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங், பாலியல் ரீதியான தொந்தரவு, வரதட்சணை கொடுமை என மொத்தம் 2,063 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்ட பெண்களும் சிறுமிகளும் அமில வீச்சுக்கு ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.வங்கதேசத்தில் கடந்த 6 மாதங்களில் 77 பெண்கள் கடத்தப்பட்டதாகவும், 13 பெண்கள் வரை கடத்தப்பட்டு, பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் மகிளா பரிசத் கூறியுள்ளது. 113 பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளானதாகவும், மேலும் 51 பேர் வரதட்சணை கேட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அந்த அமைப்பு, 84 பேருக்கு குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.2018 ஜனவரி 1 முதல் ஜூன் 30ஆம் தேதி நாளிதழ்களில் வெளியான செய்திகளை வைத்து, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக கூறியுள்ள பங்களாதேஷ் மகிளா பரிசத், உண்மையில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.