பறக்கும் விமானத்தில் நிர்வாணக் கோலத்தில் லேப்டாப்பில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்த மாணவன். விமானப் பணிப் பெண்களை கட்டிப் பிடிக்க முயன்றபோது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வங்காள தேச தலைநகர் டாக்காவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்த போது 20வயது வாலிபர் ஒருவர் இருக்கையில் இருந்து எழுந்தார். பின்னர் யாரும் எதிர்பாராத நிலையில் தான் அணிந்திருந்த உடைகளை அவிழ்த்து நிர்வாணம் ஆனார்.

தனது உடைகளை இருக்கையின் பின்புறம் தலையணை போல் வைத்து சாய்ந்து கொண்டார். அவரது இந்த நடவடிக்கை விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் அந்த வாலிபர் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. மாறாக தான் கொண்டு வந்திருந்த ‘லேப் டாப்’’ (மடிக்கணிணி) முலம் நிர்வாண ஆபாச படங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் விமான பணிப் பெண்களை கட்டித்தழுவ முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகளும், விமான ஊழியர்களும் அவரை பிடித்து துணியால் கைகளை கட்டினர்.

இதற்கிடையே விமானம் டாக்கா சென்றடைந்தது. அங்கு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. மலேசிய பல்கலைக் கழகத்தில் படித்து வரும் மாணவர் ஆவார். பயணிகளுக்கு இடையூறு கொடுத்ததாக அவர்மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.