முதல்முறையாக... இந்திய சமூக நல மைய தலைவராக தமிழர் தேர்வு...! பெருமைபடும் தமிழகம்..!
அல் அய்ன் இல் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முபாரக் முஸ்தபா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல்முறையாக....இந்திய சமூக நல மைய தலைவராக தமிழர் தேர்வு...!
அல் அய்ன் இல் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முபாரக் முஸ்தபா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய சமூக நல மையம் (indian social centre )
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து பல்வேறு நலப்பணிகளை செய்து வரும் இந்திய சமூக நல மையம் பல்வேறு சிறப்பு பணிகளை செய்து வருகிறது
இந்த சமூக நல மையத்தில் இந்தியாவி ன் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் அதிக அளவில் உள்ளனர். இதற்கு முன்னதாக மற்ற மாநிலத்தவர் தலைவராக இருந்தபோதிலும்,15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் முதல் முறையாக ஒரு தமிழரை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
தமிழகத்தின் கீழக்கரை என்ற பகுதியை சேர்ந்தவர் முபாரக் முஸ்தபா . தற்போது நடைபெற்ற சமூக நல மையத்தின் நிர்வாக குழு தேர்தலில் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் துணை தலைவராக கேவி ஈசா பொதுச்செயலாளராக முகைதீன், பொருளாளராக சந்தோஷ் குமார் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவருக்கு பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.