நிர்வாண போஸ் கொடுத்த மாடலிங் சகோதரிகள்...! வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!
உலகின் 50 டாப் ஃபேஷன் அழகிகளின் பட்டியலில் உள்ளவர்கள் ஜிஜி ஹடிட், பெல்லா ஹடிட் சகோதரிகள். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த சகோதரிகள் மாடலிங் செய்து வருகின்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பிரிட்டனின் முன்னனி பத்திரிகையான Vogue பத்திரிகையில் ஜிஜி ஹடிட் மற்றும் பெல்லா ஹடிட் இருவரும், நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், இவர்கள் இருவரும் தனித்தனியாகவும் Vogue பத்திரிகையில் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்களாம்.
சகோதரிகள் இருவரும் நிர்வாண போஸ் கொடுத்த புகைப்படங்கள், வரும் மார்ச் மாத இதழில் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு முன்னர், ஜிஜி ஹடிட், பெல்லா ஹடிட் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இவர்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.