Asianet News TamilAsianet News Tamil

ஸ்பெயினில் ஒரே பாலின ஜோடிக்கு குழந்தை பிறந்தது..! இதுல ஒரு அதிசயம் இருக்கு என்ன தெரியுமா?

ஸ்பெயினில் ஒரே பாலினத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் வாரிசை இருவரும் சுமந்து பெற்றுள்ளனர்.

miracle same gender couple gave birth to baby boy in spain from the first time in europe in tamil mks
Author
First Published Nov 22, 2023, 3:20 PM IST | Last Updated Nov 22, 2023, 3:31 PM IST

ஐரோப்பாவில், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அவர்கள் விரும்பினால் மருத்துவ உதவியுடன் குழந்தையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த சட்டம் அங்கு அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்பெயினில் ஒரே பாலின ஜோடிகளான எஸ்தாபானியா (30) மற்றும் அசாஹாரா (27) ஆகிய இருவரும் தங்களுக்கென ஒரு வாரிசு வேண்டும் என்று நினைத்தும் அதனை அவர்கள் இருவரும் சுமக்க வேண்டும் என்று எண்ணினர். 

அதன் படி, இந்த ஜோடிகள் "இன்வோசெல்" என்ற செயற்கை கருதரிப்பு மூலம் கர்ப்பமானார்கள். அது எப்படியெனில், ஒரு பெண்ணின் கருமுட்டை மூலம் உருவாகும் கரு மற்றோரு பெண்ணின் வயிற்றில் அது சிசுவாக வளரும். அதன்படி, எஸ்டெபானியாவிற்கு முதலில் கருவுறுதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. கருவுற்ற முட்டை மற்றும் விந்தணுவின் காப்ஸ்யூல் எஸ்டெபானியாவின் பிறப்புறுப்பில் செருகப்பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு இயற்கை கருத்தரித்தல் செய்யப்பட்டது. கரு உருவான பிறகு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் கருக்கள் அசஹாராவின் கருப்பைக்கு மாற்றப்பட்டன. 

இதையும் படிங்க:  கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையின் தலையை துண்டித்த ஹமாஸ் தீவிரவாதிகள்!

இதனை தொடர்ந்து, இந்த தம்பதிகளுக்கு, அக்டோபர் 30 அன்று ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 'டெரெக் எலோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்காக மட்டும் இவர்கள் 4.5 லட்சம் ரூபாய் செலவழித்தனர். மேலும், இவர்கள் ஐரோப்பாவில் குழந்தை பெற்ற முதல் ஓரினச்சேர்க்கை ஜோடி, உலகளவில் இரண்டாவது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios