வெடித்தது எரிமலை...எச்சரிக்கை அளவு 5..! 56,217 நபர்களின் பரிதாப நிலை...! அதிர்ந்தது உலகம்..!
வெடித்தது எரிமலை.. எச்சரிக்கை அளவு 5..! 56,217 நபர்களின் பரிதாப நிலை...!
பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள மாயோன் எரிமலை வெடித்துச் சிதறியதால் அபாகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையடுத்து வானை நோக்கி, பெருத்த சப்தத்துடன் தீப்பிழம்புகள் வெளியேறின.
அதோடு எரிமலைக் குளம்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் எச்சரிக்கை அளவு 4ல் இருந்து 5ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தீப்பிழம்புகள் அதிக அளவில் வெளியேறி வருவதால், சுற்று வட்டார 56,000 கிராமங்கள் அதிகளவில் பாதிப்பு அடைந்துள்ளன.
எங்கு பார்த்தாலும் மாசு அதிகமாகி உள்ளது.மேலும் மலையை சுற்றி உள்ள 8 கிலோ மீட்டர் தொலைவிலான அனைத்து பகுதிகளிலும் மக்கள் மெல்ல மெல்ல வெளியேறி வருகின்றனர்.பலரும் மூச்சு திணறல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
மக்கள் அனைவரும் மாசு மற்றும் கண் கண்ணாடி போட்டுக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. மேலும் அரசு தரப்பில் இருந்து யாரையும் வெளிவர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் தொடர்ந்து தீப்பிழம்புகள் வெளியேறி வருவதால், மேலும் பெரும் இன்னல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்காரணமாக,பாதிக்கப்பட்ட 56,217 நபர்களை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மழைக்கு அருகில் வசிக்கும் மற்றவர்களின் நிலை கேள்வி குறியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் உலகமே அஞ்சி உள்ளது. உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.