பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர்…. காதலியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள தயார் !!
பிரிட்டனில் பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த ஒருவர் 7 கோடி ரூபாய் செலவு செய்து பயோனிக் உறுப்பு பொருத்திக் கொண்டார். அறிவியலுக்கு நன்றி சொன்ன அவர், விரைவில் காதலியுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ வார்டில் என்பவர் பிறக்கும்போதே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்துள்ளார். மேலும் விதைப்பை இல்லாமலும் பிறந்த அவரது சிறுநீர்ப்பை மற்றும் உள் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டு 44 ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார். உலகில் 2 கோடி மக்களில் ஒருவருக்குத்தான் இதுபோன்ற குறைபாடுகள் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற குறைபாடுடன் பிறந்ததால் ஆண்ட்ரூ வார்டிலுக்கு வாழவே பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த அவர் லண்டன் UCLH மருத்துவமனையைச் சேர்ந்த சிறுநீரக நிபுணரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அந்த டாக்டர் ஆண்ட்ரூ வார்டிலுக்கு சிறுநீர்ப்பை மற்றும் பிறப்புறுப்பை உருவாக்க முடியும் என உறுதி அளித்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆண்டரூ வார்டில் உடனடியாக UCLH மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவருக்கு அந்த சிறுநீரக நிபுணர் ஒரு 'பயோனிக் உறுப்பை' உருவாக்கினார். வார்டிலின் இடது கையில் இருந்து தோல் மற்றும் தசைகள் எடுக்கப்பட்டன. மேலும் அவரது காலில் இருந்து ஒரு நரம்பு எடுத்து அந்த பயோனிக் பிறப்புறுப்பு உருவாக்கப்பட்டது.
அந்த பயோனிக் உறுப்பு தோல் மற்றும் தசை நரம்பு சுற்றி மூடப்பட்டிருக்கும். பயோனிக் உறுப்புடன் கூட ஒரு உள்வைப்பு இணைக்கப்பட்டு உள்ளதால் அந்த உறுப்பு எழுச்சி அடைந்து உப்பு திரவத்தை உமிழும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்த பயோனிக் உறுப்பை உருவாக்கி பொருத்துவதற்கு 7 கோடி ரூபாய் செலவானது. இதையடுத்து பயோனிக் உறுப்பு கடந்த வாரம் ஆண்ட்ரூ வார்டிலுக்க பொருத்தப்பட்டது. இந்த உறுப்பு 10 நாட்களுக்கு ஒரு முறை எழுச்சி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பயோனிக் பிறப்புறுப்பு மூலம் ஆண்ட்ரூ வார்டில் தனது நீண்ட நாள் காதலி பெட்ரா பியன் உடன் செக்ஸ் வைத்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். நான் செக்ஸ் வைத்துக்கொள்ள முடியுமா ? என ஏங்கிய நாட்கள் உண்டு. தற்போது அறிவியலின் உதவியால் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.
முதல் முறையாக நான் செக்ஸ் வைத்து கொள்வது எனக்கு பெரிய சாதனை போல் தோன்றுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நான் ஒரு உறுப்பு இல்லாமல் 44 ஆண்டுகள் கழித்து விட்டேன், அந்த நேரத்தில் எனக்கு செக்ஸ் வாழ்க்கை இல்லை என நினைத்தேன். தற்போது அறிவியல் அதற்கு துணை நின்றிருப்பதாக ஆண்ட்ரூ வார்டில் தெரிவித்தார்.