Asianet News TamilAsianet News Tamil

இனக்கலவரம்... ஒரே நாளில் 100 பேர் படுகொலை... உடல்கள் எரிப்பு..!

மாலி நாட்டில் தோகன் என்ற வேட்டையாடும் இனத்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mali attack... At least 100 people killed
Author
West Africa, First Published Jun 11, 2019, 6:18 PM IST

மாலி நாட்டில் தோகன் என்ற வேட்டையாடும் இனத்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Mali attack... At least 100 people killed

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது மாலி குடியரசு. இங்கு தோகன் என்ற வேட்டையாடும் இனத்தவர்களுக்கும், அல்கொய்தா அமைப்பினருடன் தொடர்புடைய புலானி என்ற பிரிவினருக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. பழிக்குப்பழி நடவடிக்கையாக இவர்கள் நடத்தும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

 Mali attack... At least 100 people killed

இந்நிலையில், மத்திய மாலி பகுதியில் உள்ள தோகான் கிராமத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நுழைந்த புலானி அமைப்பினர் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்தினர். அந்த கிராமத்தில் மொத்தம் 300 பேர் இருந்தனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய புலானிக்கள், அவர்களது வீடுகளிலும் கொள்ளையடித்தனர். அதன்பின் சுட்டுக் கொன்றவர்களின் உடல்களை தீயிட்டு கொளுத்தினர். இப்பகுதியில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. Mali attack... At least 100 people killed

கடந்த மார்ச் மாதம் மாலியிலுள்ள புலானி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios