இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகரை சேர்ந்த இளம்பெண் ஜேட் பெய்லி ரீக்ஸ்  என்பவர் பல்கலை கழகத்தில் படித்து  வரும் பக்கத்து வீட்டில்  வசித்து வந்த  டேவிஸ் பேட்டன்  என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.


இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் உடல்நல குறைவு ஏற்பட்ட ஜேட் தனது வீட்டில் உள்ள அறையொன்றில் படுத்து தூங்கியுள்ளார்.  அங்கு வந்த பேட்டன் அவரது அனுமதியின்றி ஜேடை கற்பழித்து விட்டார்.  தூங்கியெழுந்த ஜேட் தனது ஆடைகள் களையப்பட்டு இருந்தது அறிந்து அதிர்ந்துள்ளார்.

இதன்பின் பேட்டனிடம் பேசியதில் அவர் கற்பழித்தது  ஜேடுக்கு தெரியவந்தது.  ஆனால் அவர்கள் இருவரும் பேசிய தகவல்களை ஜேடின் போனில் இருந்து பேட்டன் அழித்து விட்டார்.  இதனால் பேட்டன் கற்பழித்துள்ளார் என்று ஜேடுக்கு உறுதியானது.

ஆனால் இதனை போலீசாரிடம் புகாராக தெரிவிக்க ஜேடுக்கு எவிடன்ஸ்  இல்லை.  அவற்றை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜேட் தனது மொபைல் போனை பேட்டனின் காரின் பின்னால் வைத்து விட்டு, அவரிடம் கற்பழித்த விவகாரம் பற்றி பேசியுள்ளார்.  இதில் அனைத்து உண்மைகளையும் பேட்டன் கூறியுள்ளார்.  அதனை ஜேட் ரகசிய பதிவு செய்து கொண்டார்.

இந்த சான்றினை நியூகேசில் கிரவுன் நீதிமன்றத்தில் தெரிவித்து ஜேட் வழக்கு தொடர்ந்துள்ளார்.  விசாரணையில் பேட்டன் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்.  இதன்பின் நீதிபதி எட்வர்டு, உடல்நல குறைவு மற்றும் தூக்கத்தில் என இரண்டு வழிகளில் ஜேட் சோர்வடைந்து இருந்துள்ளார்.

அமைதியான, நன்றாக செயல்பட கூடிய, கவனித்து கொள்பவரான பேட்டன், கற்பழிப்பில் ஈடுபட்டது பற்றி ஒப்பு கொண்டுள்ளார் என கூறி பேட்டனுக்கு நீதிபதி 4 வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.