சிரிய மக்களுக்கு உதவ சென்றவர்களும் தாக்குதலுக்கு ஆளான துயரம்..!
சிரியாவில் ராணுவத்தினருக்கும்,கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.இந்த தாக்குதலில் அதிகமாக குழந்தைகள் தான் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 12 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் பாதிகப்பட்ட சிலரையாவது மீட்க வேண்டும் என கிளம்பிய தன்னார்வ தொண்டர்களும் தாக்குதலுக்கு ஆளாகிய சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கும்,கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால போர் நிறுத்தம் வேண்டும் என,ஐநா சபை கேட்டுக்கொண்டது.ஆனாலும் பலன் இல்லாமல்,உள்நாட்டு போர் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது.
இதனை தொடர்ந்து கனடா பிரதமர் சிரியா மக்களுக்கு உதவ முன்வந்து,தனி விமானம் அனுப்பி அதில் 150 நபர்களை கனடாவிற்கு அழைத்துக்கொண்டார்.
இந்நிலையில்,வேறு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சிரியா சென்றது. அப்போது வான்வழி தாக்குதலுக்கு அவர்களுக்கும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பெருத்த காயம் அடைத்து உயிருக்கு போராடும் நிலை,உதவி கரம் நீட்ட சென்றவர்களுக்கே ஏற்பட்டு உள்ளதை நினைத்து மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்..