மோசமான சிரியா போர்..! குறிவைக்கப்படும் குழந்தைகள்...இதயத்தை நொறுக்கும் கொடூர காட்சிகள்
மோசமான சிரியா போர்..! குறிவைக்கப்படும் குழந்தைகள்...இதயத்தை நொறுக்கும் கொடூர காட்சிகள்
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இதுவரை இல்லாத அளவிற்கு சிரியாவில் நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 600 பேருக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
சிரியாவில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளருக்கும் இடையே நடந்து வரும் இந்த போரில் அதிகமாக குறிவைத்து தாக்கப்படுவது குழந்தைகளே.....
போர் நிறுத்தம் என்று சொல்லப்பட்டு வந்தாலும்,தலைநகர் பகுதியான டமாஸ்கஸ் அருகே பெருத்த தாக்குதல் நடத்தியது.
9 நாளில் 600 கும் மேல் உயிரிழப்பு
கடந்த 9 நாளில் 600 கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.393000 கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதிக்குள் சிக்கி தவிக்கிறார்கள்.3000 கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
குறிவைக்கப்படும் குழந்தைகள்
இதுவரை இறந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள்.
காயம் அடைந்தவர்களும் குழந்தைகளே ...
தலைநகர் பகுதிகளை தாக்கும் கிளர்ச்சியாளர்கள்
கிளர்ச்சியாளர்களும் ராணுவத்திற்கு ஈடாக, தலைநகர் பகுதிகளை தாக்கி வருகிறது.இதுவரை 85 சதவிகித தலைநகர் இடங்கள் சேதமடைந்துள்ளன.
உயிரிழந்த குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு கதறும் தந்தை: நெஞ்சை உருக்கும் காட்சிகள் !
இந்த போரின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான படங்கள் இதயத்தை கலங்கச் செய்யும் வகையில் உள்ளன.
இந்நிலையில் தனது குழந்தையை இழந்த தந்தை, கையில் வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தும் வீடியோ, காண்போரின் மனதை உருகச் செய்துள்ளது.