கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக  தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக  இடைவெளி போன்ற நெருக்கடிக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தாலும் பாலியல் வக்ரம் கொஞ்சம் கூட குறையவில்லை என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன . ஆனால் குவாரண்டின் எனப்படும் தனிமைப்படுத்துதலில் இருப்போருக்கு  கிடைக்கும் ஒரே நிம்மதி சுய இன்பம் மட்டும் தான் எனவும் அந்த ஆய்வு அப்படியானவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது ,  அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிக அளவில் செக்ஸ் பொம்மைகளுக்கான தேவைகள்  முன்பைவிட இப்போது அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது ,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதுவரை உலக அளவில் சுமார் 30 லட்சம் பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது .  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தையும் தாண்டியுள்ளது.  வெரும் 8 லட்சத்து 39 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சைபெற்று குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் துருக்கி ஈரான் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன அமெரிக்கா மற்றும்  ஐரோப்பா கண்டத்தையே இந்த வைரஸ் வெகுவாக தாக்கியுள்ளது . கிட்டதட்ட 180 நாடுகளை கபளிகரம் செய்துள்ள இந்த வைரசால் ஒட்டு மொத்த மனிதச் சமூகமும் வாழ்வாதாரம் இழந்து பசி பட்டினி மரணம் அழுகை என மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், அன்பு, பரஸ்பர உதவி என  மனிதநேயத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் சில நெகழ்ச்சி சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன இது சற்று ஆறுதலாக இருந்து வரும் நிலையில் மறுபுறம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள் போன்ற சம்பவங்களும் ஊரடங்களில் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது,  அதே நேரத்தில்  மனித சமுகத்தில் பாலியல் வக்கிர முகங்களும் தற்போது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன . மக்கள் உலகம் முழுக்க உயிர் பயத்தில்  உறைந்திருந்தாலும் அவர்கள் கட்டற்ற காம உணர்வுக்கு கொஞ்சம் கூட வஞ்சனை வைப்பத்தில்லை என்கிறது இந்த புள்ளிவிவரம்.

அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. தனிமையைப் போக்கிக் கொள்ள பல்வேறு முயற்சிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர் இந்தியா போன்ற நாட்டில் டிக் டாக் வெளியிடுவது ,  ஓவியம் வரைவது ,  புத்தகம் படிப்பது என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை நாம் பார்க்க முடிகிறது .  இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் தனிமையில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்படும் விரகதாபத்தை போக்கிக்கொள்ள அதிக அளவில் ஆன்லைனில் பாலியல் பொம்மைகளை ஆடர் செய்வது  அதிகரித்திருப்பதாக சில ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இங்கிலாந்து நகரத்தில் வீட்டில் தனிமைப்பட்டு இருப்பவர்கள் சுமார் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளை வாங்க முயற்சி செய்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளன . லாக்டவுனில்  பலர் பொம்மைகளுடன் சல்லாபித்து வருவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தின் ஃபைன்பெர்க் மருத்துவப் பள்ளியின் மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் மருத்துவ பேராசிரியரும் “செக்ஸ் ஆர்எக்ஸ்: ஹார்மோன்கள், உடல்நலம் மற்றும் உங்கள் சிறந்த செக்ஸ்” என்ற புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர் லாரன் ஸ்ட்ரைச்சர்,  

ஊரடங்கு சமூக விலகல் மக்கள் மத்தியில் சுயஇன்பத்தை அதிகரித்துள்ளது  அதற்காக பாலியல் பொம்மைகளை ஆர்டர் செய்வதில் எந்த தவறும் இல்லை அதேநேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருக்கும்போது எச்சரிக்கையாக அதே செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளார் .  அதேநேரத்தில் தனிமையில்  பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடும் போது  பாதுகாப்பான முறையில் ஈடுபட வேண்டும் ,  பல பெண்கள் அதற்கான உபகரணங்களை ஆன்லைனில் வாங்க முடியாவிட்டால் வீட்டிலேயே உள்ள பொருட்களையே அதற்கு பயன்படுத்தலாம் ,  இதில் எந்த அவமானமும் பட தேவையில்லை என  கூறியுள்ள ஸ்ட்ரைச்சர்,  வீட்டில் உள்ள  மெழுகுவர்த்தி , பல் துலக்கும் பிரஸ் ,  வெள்ளரிக்காய் போன்றவர்களை பயன்படுத்தும்போது அதன் மீது நிச்சயம் ஆணுறைகளால் மூடியிருக்க வேண்டும் என்றும்  பாதுகாப்பான முறையில் ஈடுபடுவதால் எந்த தவறும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார் .