Asianet News TamilAsianet News Tamil

உலகை அழிக்க அணு குண்டு தேவையில்லை இது ஒன்னு போதும்...!! சீனவை தொடர்ந்து பிரான்சும், அமெரிக்காவும் அலறுகிறது..!!

சீனாவில் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவுக்கு பரவிய நிலையில் தற்போது  பிரான்ஸ்சையும்  தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது .  இது சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தும் வைரஸாக மாறியுள்ளது 

korono virus now spreading to america and France with a week - china lass 41 for this virus
Author
Delhi, First Published Jan 25, 2020, 1:07 PM IST

சீனாவில் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவுக்கு பரவிய நிலையில் தற்போது  பிரான்ஸ்சையும்  தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது .  இது சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தும் வைரஸாக மாறியுள்ளது .  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான வைரஸ் நோய்கள் பரவி மனித இனத்திற்கு  பெரும் சவாலாக இருந்து வருகிறது . இந்நிலையில்  சீனாவை தாக்க தொடங்கிய கொரோனோ வைரஸ் அந்நாட்டு மக்களை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது . 

korono virus now spreading to america and France with a week - china lass 41 for this virus

இதுவரை இந்த வைரஸுக்கு சுமார் 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரையில் சுமார்  41 பேர் பலியாகிவிட்டனர் . இந்த வைரசிடமிருந்து மக்களை பாதுகாக்க சீனா போராடி வருகிறது .   சீனாவில் தாக்கத் தொடங்கிய கோரோனா வைரஸ் வியட்நாம் தாய்லாந்து என அண்டை நாடுகளுக்கு பரவி அங்கும் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது .  இந்நிலையில் சீனாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவருக்கு கொரோனோ வைரஸ் தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் அந்நபர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதேபோல்  முகம் நகரிலிருந்து அமெரிக்கா திரும்பிய பெண் ஒருவருக்கும் அந்த வைரஸ் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது . 

korono virus now spreading to america and France with a week - china lass 41 for this virus

இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா , அந்நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் இரண்டாயிரம் பேருக்கு வெப்ப உணர்வு சோதனை நடத்தியுள்ளது .அதே நேரத்தில் சீனாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் வந்த ஒருவருக்கும்  கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .  இந்த வைரஸ் தோன்றிய சில வாரங்களிலேயே சர்வதேச நாடுகளுக்கு பரவி தற்போது உலகையே  அச்சுறுத்தும் கொடிய வைரஸாக மாறியிருப்பது குறிப்படத்தக்கது .

Follow Us:
Download App:
  • android
  • ios