மீண்டும் கொடூரத்தை நிகழ்த்திய வட கொரிய அதிபர்... பிரானா மீன்களுக்கு இரையாக்கி ராணுவ ஜெனரல் கொடூர கொலை..!
வடகொரியாவில் ராணுவ புரட்சி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சிக்கிய ராணுவ ஜெனரலை பிரானா மீன்களுக்கு இரையாக்கி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொடூரமாக முறையில் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவில் ராணுவ புரட்சி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சிக்கிய ராணுவ ஜெனரலை பிரானா மீன்களுக்கு இரையாக்கி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொடூரமாக முறையில் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா- தென்கொரியா உறவில் இணக்கம் ஏற்பட்டு டிரம்ப்- கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்கா அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாடுகளிடையே தொடர்ந்து அவ்வப்போது மோதல் வெடித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கிம் ஜாங் உன்னின் கோரிக்கையை ஏற்க மறுத்து, டிரம்ப் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது கிம் ஜாங் உன்னுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்த சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேர் மீது நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் அவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து அங்குள்ள ஒரு விமான நிலையத்தில் வைத்து, 5 பேரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ ஜெனரல் ஒருவருக்கு கிம் ஜாங் உன் மரண தண்டனை விதித்துள்ளார். அந்த ஜெனரலின் பெயர் வெளியிடப்படவில்லை. முதலில் கை, உடல் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அவரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி உள்ளார் கிம். பியாங்க்யாங்க்கில் உள்ள தனது வீட்டில் கிம் வைத்திருக்கும் பிரமாண்டமான பிரானா மீன் தொட்டியில் தளபதியை தூக்கி போட்டுள்ளார். அதிலிருந்த நூற்றுக்கணக்கான பிரானா மீன்கள், அவரது உடலை கடித்து குதறி சாப்பிட்டுள்ளன.
பிரானா மீன்கள் மிக மூர்க்கமானவை. இரும்பு போன்ற பற்களை கொண்ட அவை சக மீன்கள், பறவைகள் மட்டுமின்றி மனித தசைகளையும் விரும்பி சாப்பிடக்கூடியவை. இரும்பு தகட்டையே கடித்து தூள்தூளாக்கும் வலுவான பற்களை கொண்ட பிரானாக்கள், மனித உடலை கடித்து குதற வெகுநேரம் ஆகாது. தந்தையிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை பெற்ற பிறகு கிம் ஜோங் உன், இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேரை போட்டுத் தள்ளி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.