அமெரிக்காவில் பயங்கரம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை..!

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Indian-origin Family 4 people Shot Dead

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் சுங்காரா(44). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 2 மகன்களுடன் வசித்து வந்தார். பொதுமக்கள் பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் கடந்த 11 ஆண்டுகளாக சந்திரசேகர் பணிபுரிந்து வந்துள்ளார். Indian-origin Family 4 people Shot Dead

இந்நிலையில், இவர்கள் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.  Indian-origin Family 4 people Shot Dead

மேலும், அவர்களை சுட்டுக் கொன்றது யார்? எதற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என தெரியவில்லை. எனவே, இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சந்திரசேகர் ஆந்திரப் மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், உயர்கல்வியைத் தொடர அமெரிக்கா சென்று தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார். அவரது பெற்றோர் ஐதராபாத்தில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios