இந்திய நாட்டின் மீது கைவைக்க எந்த நாட்டுக்கும் தைரியம் கிடையாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.   அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என தெரிவித்துள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

 

புதுதில்லி செய்தியாளர் சந்தித்த ராஜ்நாத்  சிங்கிடம் பாகிஸ்தான்  மற்றும் சீன எல்லையில் வசிக்கும் இந்திய மக்கள் மீது  அந்நாட்டு ராணுவத்தினர் நடத்தும் தாக்குதல் மற்றும் அவர்களால் நம் மக்கள்  சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார் , அதற்கு பதில் அளித்த அவர் எல்லையில் பிரச்சனை ஏற்பட்டால் அதை இந்திய பாதுகாப்பு படையினர் பார்த்துக்கொள்வார் ,  நாட்டின் பாதுகாப்பை நினைத்து யாரும் கவலைப்பட தேவையில்லை , முதலில் நாம் அனைவரும் நம் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார். 

அதேபோல பிரிவினை சக்திகள் காஷ்மீர் சிறுவர்கள் மத்தியில் பயங்கரவாத கருத்துக்களை பரப்பி வருவது கவலையளிக்கிறது என முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பிய தற்கு ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சிறுவர்களும் இந்தியர்கள்தான்,  அவர்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் காண வேண்டும் அதே நேரத்தில் இந்தியாவின் மீது கைவைக்க எந்த நாட்டிற்கும் தைரியம் இல்லை என அவர் தெரிவித்தார் .