அதிவேகம் வந்த கார்... முதல் மாடியில் சீறிப் பாய்ந்த பயங்கரம்!

In a bizarre achievement a man managed to crash his car into the first floor of a building
First Published Jan 19, 2018, 10:11 AM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



சாலையில் வேகமாகச் சென்ற கார் ஒன்று, கட்டடத்தின் முதல் தளத்துக்குப் பறந்து சென்று விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்த கார் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்றபோது சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பில் வேகமாக மோதி அருகில் இருந்த மருத்துவமனை கட்டடத்தின் முதல் தளத்துக்குள் பாய்ந்தது சென்றது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி கட்டடத்தில் வசமாக மாட்டிக்கொண்டது.

இதையடுத்து, தகவலறிந்த விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 45 நிமிடங்கள் போராடி காரில் இருந்த இருவரையும் எந்தவித அசம்பாவிதமின்றி பத்திரமாக மீட்டனர். காரை ஓட்டிவந்தவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories