பகவான் நித்யானந்த பரமசிவம் என்கிற பெயரில் நித்யானந்த வைத்திருக்கும் ட்விட்டர் அக்கவுண்டில் அவர், ‘’நம் வாழ்க்கையில் நாம் எல்லோரும் நமக்கென்று ஒரு எனர்ஜி ப்ளு பிரின்டை வைத்திருக்கிறோம். அது இல்லாமல் வாழ முடியாது. அதை விழிப்புணர்வோடு வாழ்ந்தீர்களானால் பரமசிவப் பரம்பொருளே வந்து பூசலாருக்கு சிவகதி கொடுத்ததுபோல நமக்கும் கொடுப்பார்! நாம் இருவரும் இணைந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் உயிர்பெறும். நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கின்றார்கள்.

உங்கள் வாழ்க்கைக்கான உயிர் மூல லிங்கத்தை உருவாக்கவேண்டுமானால்.. தேவையான முதல் விஷயம் - ஆழ்ந்த தெளிந்த, நம்மோடு நாமே முதிர்ந்த உரையாடலை வைத்துக்கொள்கின்ற மிக எளிமையான செயல். மனத்தின் போக்கை உணர்த்தும் மஹாவாக்கிய ஜபம். தினந்தோறும் தூங்குவதற்கு முன்பு அல்லது காலை எழுந்தவுடன் அரை மணி நேரமாவது மஹாவாக்கியத்தை ஜபியுங்கள். நீங்கள் அமர்ந்து ஜபம் செய்யும்பொழுது, பொங்குகின்ற எண்ணங்கள் உங்கள் எண்ணப்போக்கு எப்படி போகிறது என்று உங்களுக்குப் புரியவைத்துவிடும். அதுவே உங்களுக்குள் பல தெளிவைக் கொண்டுவந்துவிடும்.

மஹாவாக்கிய ஜபம் செய்து நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கும்பொழுது 'எண்ணம் இல்லாத அமைதிதான்' அடைய வேண்டிய நிலை என்பது குறிக்கோள். ஆனால்  முடியவில்லை என்பதற்காக ஜபம் செய்வதை நிறுத்திவிடாதீர்கள். வாழ்க்கையின் உயிர் மூலலிங்கத்தை உருவாக்குவதற்கு முதல் தேவை பிரத்யாகாரம். வெளியில் இருந்து சமூகம் நம்மீது நடத்திக்கொண்டிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக்கொள்வது.

வாழ்க்கையின் அடிப்படை தேவை என்னவென்றால், ஒரு முதிர்ந்த உரையாடல் உங்களுக்குள் நீங்கள் நடத்திக்கொள்வதற்கான அமைதியான உள்ளுணர்வு உருவாக்குதல் மற்றும் தினந்தோறும் அரைமணிநேரம் அமர்ந்து மஹாவாக்கிய ஜபம் செய்தீர்களானால் வாழ்க்கையில் ஜெயித்து விடுவீர்கள்’’எனத் தெரிவித்துள்ளார். நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும் என அவர் கூறியிருப்பது ரஞ்சிதாவையா? என பலரும்சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.