மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் வரிச்சலுகை, நிதி உதவி! கரும்பு திண்ண கூலி கொடுக்கும் நாடு எது தெரியுமா?
செக்ஸ் ஈடுபட்டால் பணம், வரிக்குறைப்பு உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்ற சில நாடுகளின் அறிவிப்பு, இந்தியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்தாலும், இன்னும் ஒருசில ஆண்டுகளில் இந்தியா முதலிடத்துக்கு வந்துவிடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் குழந்தை பெற்றுக் கொள்வதில் இந்தியர்கள் எப்போதும் தயங்குவதே இல்லையே.
தற்போது சீனாவில் குழந்தைப் பிறப்பை கட்டுப்படுத்த கடும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதைமீறினால், கடும் தண்டனை என்பது உறுதி. ஆனால், அத்தகைய விதிகள் எதுவும் இல்லாததால், இன்றும் சிலர் 3-4 குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருப்பதால், நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், சில நாடுகள் மக்கள் தொகையை பெருக்க, தங்கள் மக்கள் அதிகளவு செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.
டென்மார்க் நாட்டில் மக்கள் தொகை மிகவும் குறைவு என்பதால், தங்களது குடிமக்கள் அதிக நேரம் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மிட்நைட் மசாலா ரீதியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. நாட்டை பாதுகாக்க குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் அரசு, அதற்காக, சில குதூகல நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
ரஷ்யாவும் இந்த பட்டியலில் தான் இருக்கிறது. நாட்டு மக்கள் மிக இன்பமாக செக்ஸ் வைத்து, குழந்தைகளை அதிகமாக பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறும் ரஷ்யா, இதற்காக செப்டம்பர் 12ஆம் தேதியை ஒதுக்கியுள்ளது. அதேபோல், சிங்கப்பூரும் தனியார் நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து, மிட்நைட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. படுக்கையறை விளையாட்டில் இடைவிடாது ஈடுபட்டு, குழந்தைகளை பெற்றெடுப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு எனக் கூறி, உற்சாகத்தை கிளப்பிவிடுகிறது சிங்கப்பூர். பிரான்ஸ் இன்னும் ஒருபடி மேலேபோய், அதிக செக்ஸ் வைத்து, அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால், வரி விலக்கு, நிதியுதவி உள்ளிட்ட பல சலுகைகள் தரப்படும் என கரும்பு தின்ன கூலி கொடுக்கிறது.
மேலும், அதிக குழந்தைகளை வைத்திருப்போர், அங்குள்ள தீம் பார்க்குகளில் உள்ள குளங்களில் குடும்பத்துடன் இலவசமாக குளித்து வழங்க, பாஸ் வழங்குகிறது பிரான்ஸ். எப்போதும் எந்திர மனிதர்களையே கட்டி அழும் ஜப்பானும், கொஞ்சம் மனைவியையும் கட்டி அணையுங்கள் என பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும், உழைப்பிலேயே ஊறிப்போன ஜப்பானியர்கள், அரசின் விளம்பரங்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. இதனால், அவர்கள் கடும் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள் என்பதற்காக, ரோபோட் குழந்தைகளையும் தொழிற்சாலைகளில் பிரசவித்து மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.