மனைவி தொல்லையில் இருந்த தப்பிக்க இவர் என்ன செஞ்சிருக்கார் பாருங்க!!
மனைவி தொல்லையில் இருந்து தப்பிக்க அமெரிக்காவைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர், அடிக்கடி திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி வாண்ட்டடாக ஜெயிலுக்கு போன சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் கன்சால் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் ஜான். 71 வயதான இவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவரது பிள்ளைகள் அனைவரும் திருமணம் செய்து வெவ்வேறு நகரங்களில் குடியிருந்து வருகின்றனர். லாரன்ஸ்சும் அவரது மனைவி மடோனா இருவர் மட்டும் தனியாக உள்ளனர்.
லாரன்ஸ் மனைவி எப்போது பார்த்தாலும் தனது கணவருடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாராம். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வரும்போதெல்லாம், லாரன்ஸ் சிறிது நேரம் வெளியே சென்று விடுவாராம்.
இது தொடர்கதையாகவே வெறுத்துப் போன லாரன்ஸ் புது யுக்தி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதன்படி அந்த பகுதியில் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதை தான் தான் செய்தேன் என்று போலீசில் கூறி வாண்ட்டாக கைது ஆகி சிறைக்கு சென்று விடுவாராம்.
ஆனால் போலீசார் கொள்ளை குற்றம் குறித்து விசாரணை நடத்திய , இவர் உண்மையான குற்றவாளி இல்லை என தெரிந்து கொண்ட பின் விடுவித்து விடுவார்களாம்.
இது போன்று அடிக்கடி நடக்கவும் லாரன்சிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தனது மனைவியின் தொல்லைக்கு பயந்து அவர் ஜெயிலுக்கு வருவது தெரியவந்ததது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.