Asianet News TamilAsianet News Tamil

இந்து பெண்ணை எம்.பி’யாக்கி ஆச்சரியப்படுத்திய பாகிஸ்தான்...

Hindu woman elected to Pakistans senate in historic first
Hindu woman elected to Pakistan's senate in historic first
Author
First Published Mar 5, 2018, 5:56 PM IST


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள இந்து குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பேநசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் அவர் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Hindu woman elected to Pakistan's senate in historic first

கிஷு பாய் என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமாரிக்கு பதினாறு வயதிலேயே திருமணமானாலும், அவருடைய கணவர் உதவிகரமாக இருந்ததால் அங்கு அவர் படித்துவந்தார். சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ள அவர், கடந்த இருபது ஆண்டுகளாக தார் பகுதியிலுள்ள இளம்பெண்களின் கல்வியையும், சுகாதாரத்தையும் பெறுவதற்கு போராடி வந்திருக்கிறார். 

Hindu woman elected to Pakistan's senate in historic first

இதுகுறித்து கிருஷ்ணகுமாரி கூறியதாவது; 'தார் பகுதியிலிருந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு தேர்வான  முதல் நபராக நான் இருப்பேன். இதற்கு காரணமான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பிளவால் பூட்டோ மற்றும் பார்யால் டல்பூர் ஆகியோருக்கு நன்றி கூறினால் மட்டும் போதாது' என்று அவர் கூறினார்.

மேலும் தார் பகுதியில் கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது. நான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அடைந்தபின் அந்நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios