ருத்ர தாண்டவம் ஆடிய கனமழை... 61 பேரின் உயிரை பறித்த நிலச்சரிவு..!
சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 61 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 61 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தெற்குப் பகுதியில் உள்ள குவாங்ஸி பகுதியில் கடந்த சில நாட்களாவே கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், 8 மாகாணங்களில் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வெள்ளத்தினால் ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது. இயற்கையின் இந்த ருத்ர தாண்டவத்துக்கு இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.