பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவன்…. வெறிச் செயலால் 17 பேர் பலி !!

Gun fire in America 17 killed
Gun fire in America 17 killed


அமெரிக்காவின் புளோரிடா  மாநிலம் பார்க்லேண்ட் நகரில் உயர்நிலை பள்ளிக் கூடம் ஒன்றில் முன்னாள் மாணவர் ஒருவர்  வெறித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 17 பேர் வரை கொல்லப்பட்டனர்.

புளோரிடா  மாநிலம் பார்க்லேண்ட் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நிகோலஸ் கிரஸ் என்ற மாணவன் படித்து வந்தான். ஆனால் நிகோலஸ் ஒழுங்கீனமான காரியங்களில் ஈடுபட்டதால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Gun fire in America 17 killed

இந்நிலையில்  இன்று பள்ளிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நிகோலஸ் கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கியால் சுட்டான். இதில் 13 மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிகோலசை கைது செய்தனர். இச்சம்பவத்தால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் இறந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின்  உடல்களைப் பார்த்து கதறி அழுதனர்.

Gun fire in America 17 killed

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக புரோவார்டு நகர ஷெரீப் ஸ்காட் செய்தியாளர்களிடம் பேசும்போது,  நிகோலஸ் கொலைகாரன்.  அவன் போலீசாரின் காவலில் உள்ளான். 

Gun fire in America 17 killed

அவனது இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.  அவனிடம் நிறைய துப்பாக்கி குண்டுகள் வைக்கும் உறைகள் உள்ளன.  அதனால் ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி ஒன்று அவனிடம் இருக்க வேண்டும் என கூறினார்.

Gun fire in America 17 killed

தற்போது நிகோலசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios