பொழுதுபோக்கு பூங்காவில் அசத்தும் காகங்கள்... பொதுமக்கள் வியப்பு!
பிரான்சில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை சுத்தம் செய்ய காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது பொதுமக்களவை வியப்படைய செய்துள்ளது. பிரான்சின் மேற்கே உள்ள வெண்டீ என்ற பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க 'புய் டு ஃபோ' பூங்கா அமைந்துள்ளது.

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள், சிகரெட் துண்டுகள் மற்றும் சாக்லேட் தாள் போன்ற சிறிய ரக குப்பைகளை போட்டுச் செல்வதால் அது காற்றில் பறந்து பூங்காவை அசுத்தப்படுத்தியது. இவற்றை சுத்தம் செய்வது பூங்கா நிர்வாகத்துக்கு மிகுந்த சவாலாகவே இருந்தது. எனவே இப்பணிகளை செய்ய காகங்களை ஈடுபடுத்த பூங்கா நிர்வாகம் அதிரடி முடிவை எடுத்தது.
பூங்காவில் தரையில் போடப்படும் குப்பைகள், சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்ய அங்குள்ள 6 காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பூங்காவில் உள்ள குப்பைகளை சேகரித்து சிறிய அட்டைப் பெட்டிகளில் அவை போடுகின்றன. அப்படி ஒரு குப்பை துண்டை எடுத்துவந்து போடுவதற்கு காகங்களுக்கு பரிசாக உணவு அளிக்கப்படுகிறது. இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காகவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளதாக பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.