உடலுறவு வைப்பதற்கு முன் கவனம்... விந்தணு மூலம் பரவும் கொரோனா... சோதனையில் அதிர்ச்சி..!
கொரோனா வைரஸ் விந்தணு வழியாகவும் பரவ வாய்ப்புள்ளதாகவும், இதனால் கொரோனா பாதிப்பு உள்ளவருடன் உடலுறவு கொள்வதன் மூலமாக நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக து சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் விந்தணு வழியாகவும் பரவ வாய்ப்புள்ளதாகவும், இதனால் கொரோனா பாதிப்பு உள்ளவருடன் உடலுறவு கொள்வதன் மூலமாக நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக து சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சீனாவின் வுகானில் இருந்து கொரோனா பரவியது. இந்நிலையில் அங்குள்ள ஷன்குவி மாநகராட்சி மருத்துவமனையில் 38 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை செய்ததில் அவர்களது 16 சதவீதம் பேரது விந்தணுவில் கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது. இந்த ஆய்வு முடிவுகள் ஜாமா நெட்வொர்க் இதழில் வெளியாகி உள்ளது.
சார்ஸ் கோவ்-2 வைரஸ் கொரோனா பாதித்தவர்களது விந்தணுவில் உள்ளது என சீன மக்கள் லிபரேஷன் ஆர்மி ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டயாங்கெங் லீ தெரிவித்துள்ளார். ஆண்களின் விந்தணுவில் கொரோனா வைரஸால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இருப்பினும் கருமுட்டையில் செலுத்தப்படும் சமயத்தில் உடல் நோய் எதிர்ப்பு சக்தி பயன்படாது எனக்கூறுகின்றனர்.
கொரோனா மட்டுமல்ல, எபோலா, சிகா உள்ளிட்ட வைரஸ்களும் ஆண்களின் விந்து செல்லும் பாதையில் இருந்தது. வைரஸ் தாக்கத்தில் இருந்து நோயாளி முழுவதுமாக குணமானாலும் கூட, வைரஸ் தாக்கம் உடலில் இருந்து நீங்காது. கொரோனாவும் எபோலா போலவே பரவுமா என உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆனால் இது ஆபத்தானது. நோயாளியின் எச்சில், ரத்தம், மலம் மூலமும் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. உடலுறவு மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க ஆணுறை பயன்படுத்துவதே சிறந்த வழி. ஆனால் கொரோனா பரவும் இந்த காலத்தில் பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.