கியூபா முன்னாள் அதிபர் "ஃபிடெல் காஸ்ட்ரோ"வின் மகன் தற்கொலை!!
கியூபா முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உள்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோ. அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் ஃபிடெல். கியூபா நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாக வழங்கியவர். இவர் தனது 90வது வயதில் கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தார்.
ஃபிடெல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியாஜ் பாலர்ட். இவர், தனது தந்தையான ஃபிடெல் காஸ்ட்ரோவை போலவே தோற்றமளித்ததால், இவரை ஃபிடெலிடோ என்றும் அழைப்பர். அணு இயற்பியல் படித்துள்ள டியாஜ், கியூபா அறிவியல் மையத்தின் துணை தலைவராகவும் கியூபா அரசின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், டியாஜ் பாலர்ட் கடந்த சில மாதங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கியூபா நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற ஃபிடெல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.