இரவு நேரங்களில் பேய், ஆவிகளுக்குப் பயந்து பெண்களின் உடைகளை, ஆண்கள் அணிந்து கொள்ளும் வினோதமான நிகழ்வு தாய்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. 

தாய்லாந்து நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மூன்று இளைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், மேலும், பல இளைஞர்கள் உயிரிழக்க நேரிடும் என்கிற பயத்தில் இருந்து வருகின்றனர் அந்த கிராமத்து மக்கள். 

இதனால், பேய் - ஆவிகளை ஏமாற்ற நூதன முறையை கையாண்டு வருகின்றனர். இதுல பெரிய விஷயம் ஒன்னுமில்லீங்க... இரவு நேரத்துல தூங்கப் போகும் ஆண்கள், பெண்கள் போன்ற உடை அணிந்து கொள்கின்றனர். அதுமட்டுமில்லீங்க... இந்த வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்றும் பலகைகளை வீடுகள் முன் தொங்க வைக்கின்றனர் அந்த கிராமத்து வாசிகள்.

இந்த பலகைகளைப் படிக்கும் ஆவிகள், ஆண்கள் வீட்டில் இல்லை என்று திரும்பி சென்று விடும் என்று நம்புகின்றனர். இந்த விஷயத்தை படிக்கும்போது, சிரிப்பு வரத்தான் செய்யும். தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறி வரும் இந்த கால கட்டத்தில் இப்படிம் ஒரு கிராமம் இருக்கா? என வியக்கத்தான் தோன்றுகிறது.