Asianet News TamilAsianet News Tamil

தீராத காய்சலுக்கு மத்தியில் , வீடியோ மூலம் அட்வைஸ் கொடுத்த போரி ஜான்சன்..!! மக்கள் பொறுமையாக இருக்க அறிவுரை.!!

ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது  இங்கிலாந்து மக்கள் வாரவிடுமுறை கொண்டாட்டம் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு பொறுமையாக இருக்க வேண்டிய மிக அவசியம் ,

England prime minister bori jhanson advice to people through video
Author
Chennai, First Published Apr 4, 2020, 12:19 PM IST

வீட்டில் தங்கியிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என இங்கிலாந்து மக்களுக்கு அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  உலகமெங்கும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இங்கிலாந்து வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் வைரஸ் தொற்றுக்கு  ஆளாகியுள்ள அந்நாட்டின் பிரதமர் போரி ஜான்சன் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் .  மருத்துவ  பரிசோதனையில்  அவருக்கு  வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்தேன் இங்கிலாந்தில் உள்ள டவுனிங் தெருவிலுள்ள தன் இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் .  கடந்த ஏழு  நாடுகளாக அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்துள்ள அவர்,   யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் . 

England prime minister bori jhanson advice to people through video

 கடந்த ஏழு நாட்களாக தனிமையில் இருந்து வரும் அவர்,   தற்போது வீடியோ மூலம் மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார் அதில்  , நாடு தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது .  மக்கள் அதை உணர்ந்து புரிந்து நடந்து கொள்ள வேண்டும் ,  இந்த வைரசை விரட்ட மருத்துவ ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது .  மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் உங்களது உயிரையும் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ள வீட்டிலேயே  தங்கி இருப்பது அவசியம் ,  விரைவில் ஒரு நல்ல செய்தி சொல்லுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார் ,  தொடர்ந்து பேசியுள்ள அவர் தற்போது ஏழு நாட்களாக தனிமையில் இருந்து வருகிறேன் ,  தற்போது ஓரளவுக்கு குணமடைந்ததாக  உணர்ந்தாலும் இன்னும் நோய் அறிகுறிகள் உடலின் தென்படுகிறது .  அவை சிறிய அறிகுறிகள் தான்  இன்னும்  கொஞ்சம்  காய்ச்சல் இருக்கிறது,  விரைவில் பூரண குணமடைவேன்,  எனவே இந்த நோய் அறிகுறிகள் முற்றிலும் குணமாகும்வரை தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார், 

England prime minister bori jhanson advice to people through video

 இந்த  வைரஸை  ஒழிக்க அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டுள்ளனர் , நாள் ஒன்றுக்கு  ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது  இங்கிலாந்து மக்கள் வாரவிடுமுறை கொண்டாட்டம் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு பொறுமையாக இருக்க வேண்டிய மிக அவசியம் , பொறுமையாக இருந்தால் மட்டுமே இந்த வைரஸை எதிர்கொள்ள முடியும் .  அரசு சொல்லுகின்ற விதிமுறைகளை தயவுசெய்து பின்பற்றுங்கள் ,   இந்த வைரசுக்கு எதிராக நாடு பெரிய முயற்சிகளையும் பெரிய தியாகங்களையும் செய்துகொண்டிருக்கிறது .  தற்போது நாம் எடுத்து வரும் முயற்சிகளின் மூலமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.  நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது என தெரிவித்துள்ள அவர் உங்களை விரைவில் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios