யானைகளுக்குள் நடந்த பாசப்போராட்டத்தில் அருவியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி
தாய்லாந்தில் வடகிழக்குப் பகுதியில் அருவி உச்சியில் இருந்து கீழே விழுந்த யானையை காப்பாற்ற முயன்றதில் மற்ற யானைகள் கீழே விழுந்ததில் 6 யானைகள் பலியாகின
தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள 'காவோ யா' தேசிய பூங்காவை தாய்லாந்து வனத்துறை மற்றும் வனவிலங்கு காப்பகம் பராமரித்து வருகிறது.இந்த வனத்துக்குள் 'ஹாய் நரோக்'(ஹெல் அபிஸ்) எனும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த வனவிலங்கு காப்பகத்தில் ஏராளமான யானைகள் இருக்கின்றன. இன்று அதிகாலை 3 மணியில் இருந்து அந்த அருவி அமைந்திருக்கும் பகுதியில் இருந்து யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. இந்த பிளிறல் சத்தத்தைக் நீண்ட நேரத்துக்குப்பின் கேட்ட வனப் பாதுகாவலர்கள் அந்த இடத்தை நோக்கி சென்றனர்.
அங்கு பார்த்தபோது, யானைகள் கூட்டம் அருவியின் பள்ளத்தில் விழுந்து உதவிக்காக பிளிறியடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், நீண்ட போராட்டத்துக்குப்பின், பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த இரு யானைகளை அங்கிருந்து மீட்டனர்.
இதுகுறித்து வனச்சரணாலயத்தின் செய்தித்தொடர்பாளர் சம்போச் மணிராத் நிருபர்களிடம் கூறுகையில், " யானைகளின் உதவிக்கான பிளிறல் சத்தம் கேட்டு நாங்கள் அனைவரும் அந்த அருவி இடத்துக்கு சென்று பார்த்தபோது, யானைகள் ஒன்றன்மீது விழுந்து, பாறைகளுக்கு இடையே சிக்கி உதவிக்காக அலறிக் கொண்டு இருந்தன.
யானைகளுக்கு இடையே உதவும்பழக்கம், பாசப்பிணைப்பு அதிகம். ஒரு யானை தவறி விழுந்தவுடன் மற்ற யானைகள் காப்பாற்ற முயற்சித்தபோது, அருவி உச்சியில் இருந்து விழுந்து இறந்துவிட்டன. உயிரோடு இருந்த இரு யாணைகள் மட்டும் காட்டுக்குள் விரட்டினோம்.
இரவு முழுவதும் பெய்த மழையால் பாறைகள் வழுக்கிவிட்டு இருக்கலாம். மீட்கப்பட்ட இரு யானைகளும் பயத்தில் இருப்பதால், எங்கும் செல்லாமல் அருவிக்கு அருகேயே நிற்கின்றன" எனத் தெரிவித்தார்