உலகில் மூன்றில்,  இரண்டு பங்கு நாடுகள் வளர்ந்த வரும் நாடுகளின் பட்டியலில் உள்ளன. அப்படி பட்டியலில் உள்ள வளரும் நாடுகள் வரலாறு காணாத பொருளாதார இழப்புகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அண்டை மாநில முதல்வர்களையே அசரவைத்த எடப்பாடி... ஒரே நாளில் இத்தனை அறிவிப்புகளா?

ஐ.நா. வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் ஒரே ஒரு ஆறுதல் செய்தி என்னவென்றால், சீனா மற்றும் இந்தியாவை தவிர பிற வளர்ந்த நாடுகளில் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்படும் என்று அறிவித்துள்ளது தான். மேலும் சரிவை சந்திக்கும் நாடுகளின் பொருளாதாரத்தை சீரமைக்க 2.5 டிரில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படும் என்றும் ஐ.நா. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: அமலா பால் அழகை வர்ணித்த “மாஸ்டர்” பிரபலம்... வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு...!

இந்த நிலைமையை சமாளிக்கும் விதமாகவும், மக்களிடையே உடல், மனம் மற்றும் பொருளாதார அளவில் ஏற்படும் அதிர்ச்சியை சரி செய்யும் விதமாகவும் 20 முக்கிய நாடுகள் 5 கோடி டாலர்கள் வரை நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது சற்றே ஆறுதலான செய்தி. கொரோனாவால் உலகம் பொருளாதாரம் மோசமடைந்து வரும் இந்நிலையில், நிதி மற்றும் அன்னிய செலாவணி ஆகியவற்றில் நெருக்கடிகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.