இவர பார்த்த பிறகும் தண்ணியடிப்பீங்களா? எல்லாம் முடிந்துபோன சீன முதியவர்!!~
சீனாவில் 30 ஆண்டுகளாக தொடர்நது மது அருந்தி வந்த காரணத்தால் முதியவர் ஒருவரின் கழுத்து, மார்பு, முதுகு போன்ற இடங்களில் மிகப்பெரிய கட்டிகள் வந்து தற்போது உயிருக்கு போராடி வருகறார்.
சீனாவைச் சேர்ந்த வாங் யி என்பவர் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்தார். அவருக்கு சிறு வயதில் இருந்தே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதாவது தனது 13 ஆவது வயதிலேயே குடிக்கத் தொடங்கினார்.
நாளடைவில் அவரால் அந்த குடிப்பழக்கத்தை விட முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டில் வாங் யி கழுத்தில் சிறிதாக கட்டி ஒன்று வந்தது. முதலில் அதை சாதாரணமாக எண்ணிய வாங் யி, தொடர்ந்து அந்த கட்டி பெரிதாகவே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அந்த கட்டியை மருந்துகளால் சரிப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் 2011 ஆம் ஆண்டு அந்த கட்டி கழுத்து முழுவதும் பரவி தலையைக் கூட திருப்ப முடியாத அளவுக்கு பெரிதானது. அதன் பின்னரும் வாங் யி மருந்துகள் மட்டுமே சாப்பிட்டு வந்தார். கடந்த ஆண்டு அந்த கழுத்து கட்டியை டெஸ்ட் பண்ணிப் பார்த்ததில் தொடர்ந்து மது அருந்தியதால் வந்த வினை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது வாங் யி மது அருந்துவதை நிறுத்திவிட்டாலும் அந்த கட்டி நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வருகிறது. தற்போது மூச்சு விடகூட முடியாத அளவுக்கு அந்த முதியவர் சிரமப்பட்டு வருகிறார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்தாலும் அவரால் இன்னும் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என மருத்துவர்கள் கெடு விதித்துள்ளனர்