இந்த அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா தொற்றாம்... 3 புதிய அறிகுறிகள் அறிவிப்பு..!

ஏற்கனவே உள்ள 9 அறிகுறிகளுடன் சேர்த்து மொத்தம் 12 அறிகுறிகளை அமெரிக்க நோய் தடுப்பு கட்டுப்பாட்டு கழகம் கூறியுள்ளது. 

Despite these signs, corona virus infection ... 3 new signs announced

கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே செல்கிறது. முதலில் தலைவலி, காய்ச்சல், இருமல் போன்ற குளிர்க் காய்ச்சலுக்கு இருந்த அறிகுறிகளே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது உடலில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய அளவுக்கு தீவிரமான நோயாக கொரோனா தொற்று மாறியிருப்பதாக அஞ்சப்படுகிறது. Despite these signs, corona virus infection ... 3 new signs announced

குறிப்பாக கொரோனா வைரஸானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்கி, அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும் எனப்படுகிறது. பொதுவாக வைரஸ் தொற்று இரண்டு வகைகளில் உடலில் நோயை உருவாக்கும். ஒன்று, உடல் திசுக்களைத் தாக்கி, மேலும் பெருகும். இன்னொன்று, நோய்க்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும்,”என்கிறார்கள். கொரோனா வைரஸால் இதய பாதிப்பு மற்றும் ஸ்ட்ரோக் பாதிப்புகளும் வர வாய்ப்புள்ளதாக சில மருத்துவ ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர். Despite these signs, corona virus infection ... 3 new signs announced

இதுமட்டுமல்லாமல், கொரோனா பாதித்த ஆண்களின் பிறப்புறுப்புகளில் ‘பெரும் மாற்றங்கள்' நிகழ்ந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.  இது சம்பந்தப்பட்ட ஆய்வு, “கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், நோய் குணமடைந்த பின்னர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்,” என்று அறிவுறுத்தியுள்ளது. 

“முதலில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களைக் கண்டுபிடிக்க தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பவர்களை சோதிக்க சொன்னார்கள். ஆனால், மூக்கிலிருந்து சலி வந்து கொண்டே இருப்பது, தொண்டை வலி உள்ளிட்டவைகளும் கொரோனா அறிகுறி என்றார்கள். பின்னர் செரிமானப் பிரச்னை, வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கும் கொரோனா அறிகுறிகளாக இருக்கும் என்றார்கள். ஆனால் இதுவரை காய்ச்சல், இருமல், குளிர் எடுப்பது, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது போன்றவைகள்தான் கொரோனாவுக்கான பொது அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. 

அதே நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களுக்கு பொதுவாக சொல்லும் அறிகுறிகளைத் தாண்டி, வயிற்றுப் போக்கு, வாந்தி, மார்பு அல்லது வயிற்றுப் பகுதியில் வலி, மூக்குச் சலி, வறட்டுத் தொண்டை வலி, குழப்பமான மனநிலை உள்ளிட்ட அறிகுறிகளும் தென்பட்டுள்ளன. இதனுடன் கூடுதலாக மிகச் சிலருக்கு ருசி இல்லாமல் போவது, சுவாசத்தில் நுகர்வு திறன் இல்லாமல் போவது உள்ளிட்ட அறிகுறிகளும் தென்பட்டுள்ளன. Despite these signs, corona virus infection ... 3 new signs announced

கொரோனா தொற்று ஏற்படுபவர்களுக்கு தற்போது புதிதாக, மூக்கு ஒழுகுதல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.  கொரோனா தொற்று ஏற்பட்டு, 2 முதல் 14 நாட்களுக்கு பிறகே இந்த அறிகுறிகள் தென்படும் என்றும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 9 அறிகுறிகளுடன் சேர்த்து மொத்தம் 12 அறிகுறிகளை அமெரிக்க நோய் தடுப்பு கட்டுப்பாட்டு கழகம் கூறியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios