கொரோனா வைரசை எண்ணி நாம் அச்சப்பட தேவையில்லை அது எளிதில் எதிர்கொள்ளவேண்டிய வைரஸ் என்றும் ,  அமெரிக்கா ,  இத்தாலி போன்ற நாடுகளில் அது உயிரிழப்புக்களை ஏற்படுத்துவது போல இந்தியாவில் ஏற்படுத்த வாய்ப்பில்லை எனவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரைப்பை குடலியல் ஆராய்ச்சியாளரும் ஆசிய நிறுவனத்தின் தலைவரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணருமான டாக்டர் டி நாகேஷ்வர ரெட்டி தெரிவித்துள்ளார் .  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அவர் , கூறியதாவது,  

கொரோனா வைரஸ் சீனாவில் கடல் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையில் இருந்து தோன்றியதாக செய்திகள் கிடைக்கின்றன.  இது இத்தாலி அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி இந்தியாவிற்கு வந்துள்ளது .  இந்த வைரஸ் ஆர்என்ஏ வகையை சார்ந்த வைரசாக உள்ளது.  இது திரிபு வவ்வால்களின் இருப்பதாக தெரியவந்துள்ளது .  இது மற்ற நாடுகளில் மிக வேகமாக பரவி அங்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது .  குறிப்பாக  இத்தாலி , அமெரிக்கா அல்லது இந்தியா என பரவும் நிலையில்  இந்த வைரசின்  மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் இந்த வைரஸ் வெளிபட்டுள்ளன .  நான்கு நாடுகளிலும் செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின் மூலம்  இது தெரியவந்துள்ளது.  அமெரிக்காவில்  முதலாவது , இத்தாலியில் இரண்டாவது ,  சீனாவில் மூன்றாவது ,  மற்றும்  இந்தியாவில் நான்காவது என மரபணுவின் வரிசைகள்  அமைந்திருப்பது தெரியவந்துள்ளது . அதாவது இத்தாலியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மரபணு முற்றிலுமாக வேறுபட்டுள்ளது  இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .  இந்தியாவில் பரவியுள்ள வைரஸின்  மரபணு ஸ்பைக் புரதத்தில் ஒற்றைப் பிறழ்வு ஏற்படுகிறது ,  அதாவது ஸ்பைக் புரதம் என்பது மனித உயிரணுவுடன் இணைந்த ஒரு பகுதி ,  இந்த வைரஸில் ஒரு சிறிய பிறழ்வு நடந்துள்ளது . 

எனவே அந்த வைரஸ் மரபனு பிறழ்வில் ஒரு சிறிய பலவீனம் ஏற்பட்டுள்ளது ஆகவே  இந்தியாவில் பரவும் வைரசில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிக முக்கியமான காரணியாக உள்ளது .  இத்தாலியில் உள்ள வைரஸில் மூன்று பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன இது அந்த மக்களுக்கு மிகவும் ஆபத்தானது இத்தாலியில் இன்னும் மற்றபிற அம்சங்களும் அதில் இணைந்து கொண்டுள்ளன.  அதாவது பல நோயாளிகளின் வயது 70 முதல் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். புகைப்பிடித்தல் ஆல்கஹால் நீரிழிவு உயர்ரத்த அழுத்தம் போன்ற நிலைகள் அங்கு அதிகம் என்பதால்   இந்த ஒட்டுமொத்த பிரச்சனைகளும் இணைந்து அங்கு இறப்பு விகிதம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. 

அதாவது அங்கு 10 சதவீத இழப்புகள் நிகழ்ந்துள்ளது.  ஆனால் அது இந்தியாவில் அமெரிக்காவில் சீனாவில் இறப்பு சதவீதம் என்பது 2% மட்டுமே . ஆகவே வைரஸின் மரபணுவின் அடிப்படையில் இறப்பு மற்றும் தொற்று விகிதத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது ஆகவே மற்ற நாடுகளில் பரவுவதை பார்க்கிலும் இந்தியாவில் அந்த வைரஸ் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று எடுத்துக்கொள்ள முடியுமா என செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் ,  அப்படி நாம்  அறுதியிட்டு சொல்ல முடியாது இது தொடர்பாக நாம் மிகப்பெரிய ஆய்வினை மேற்கொண்டு வருகிறோம்,  

ஆனால் நிச்சயமாக அதன் மரபணுவில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது  இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்  என அவர் தெரிவித்துள்ளார் . அதே நேரத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது என்ற அவர்  இன்னும் ஓரிரு மாதங்களில் அதற்கான தடுப்பு மருந்துகள் வந்துவிடும் என்றும் அடுத்த 16 மாதங்களில் எங்களுக்கு ஒரு திட்டவட்டமான தடுப்பூசி கிடைக்கும் எனவே 2021க்குள் தடுப்பூசிகள் கிடைத்துவிட்டால் இந்த வைரஸை ஒழித்துவிடலாம். இந்த வைரஸை எண்ணி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் .