சீனாவில் கவர்ச்சி உருவபொம்மை உற்பத்தி இந்த ஆண்டு கொரோனாவால் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் சீனாவில் வூகான் நகரில் பரவிய கொரோனா உலக நாடுகளை கதறடித்துக் கொண்டிருக்கிறது. உலகளவில் ஒரு கோடியே 48 லட்சத்தை கடந்து  போய் கொண்டிருக்கும் நிலையில் நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும்  6.14 லட்சத்தை தாண்டியுள்ளது.   அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 44 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 21 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 7 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கும், இந்தியாவில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்குள்ளேயே பலரும் முடங்கிக் கிடப்பதாலும், தனிமைப்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர். இதனால் சீனத் தயாரிப்பான கவர்ச்சி பொம்மைகளை பலரும் வாங்கி வருகின்றனர். இதனால் வழக்கமானதை விடவும் இருமடங்காக இந்த வகையான பொம்மைகளின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.