கொத்து கொத்தாக தூக்குப் போடும் ஆண்கள்... எங்கே தெரியுமா..?
மத்திய கென்யாவில் உள்ள நியன் துரா பகுதியில் ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் அங்கு நிலவிவரும் வறுமைதானாம். இந்த ஆண்டு மட்டும் நியன் துராவில் 70-க்கும் மேற்பட்ட ஆண்கள் வறுமையின் பிடியால் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இங்கு பிரச்சனைக்கு தற்கொலைதான் தீர்வு என்ற மனநிலை நீண்ட காலமாகவே உள்ளது. அதனால்தான் வறுமை இங்கு வாட்டி எடுப்பதை தாங்க கூடிய மனநிலைக்கு இல்லாமல் சுலபமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குடும்ப தலைவனான ஆண்களின் இறப்பு விகிதம் சற்று அதிகமாகவே உள்ளது.
இப்பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் சிலர்,“ வறுமையால் இங்கு பல குடும்பத்திலுள்ள ஆண்கள் இம்முடிவை எடுக்கிறார்கள். பதினெட்டு வயதுள்ள ஆண்கூட தன் அப்பா இறந்த தூக்கத்தில் அவனும் தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என கூறுகிறார்கள் கென்ய மக்கள்.