கொரோனா வைரஸை தடுக்க போதிய நடவடிக்கைகள்  எடுக்கவில்லை என  சீன அதிபருக்கு அந்நாட்டில் எதிர்ப்புகள்  வலுத்து வருகின்றது , கடந்த டிசம்பர் மாதம்  வுஹனில் தோன்றிய கொரோனா  வைரஸ் அந்நாடு முழுவதும்  பரவியுள்ளது .  இந்த வைரஸ்க்கு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  நாளொன்றுக்கு குறைந்தது நூறு பேராவது இந்த வைரஸுக்கு உயிரிழந்து வருகின்றனர்.    இந்த வைரஸ் முன்பைவிட தற்போது மிக வேகமாக பரவிவருகிறது . 

 

இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது ,  இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பாக செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ,  மற்றும் அவர்கள் கடத்துவது போன்ற சம்பவங்களும் சீன அரசால் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன . இந்நிலையில் மிக வேகமாக பரவும் இந்த வைரஸில் இருந்து தப்பிக்க சீன அதிபர் தலைமறைவாகி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்து உள்ளதாக தகவல் வெளியானது . இதனையடுத்து  அதிபர் ஜி ஜின்பிங்  வுஹன் நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார் .  அதேபோல் வைரஸை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  அப்போது கொரோனா  வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார் . 

அப்போது சமூகவலைதளத்தில்  வைரஸ் காய்ச்சல் குறித்தும்  பரப்பப்படும் தவறான தகவல்களை தடுக்க வேண்டும்,  சீரழிவுக்கு வழிவகுக்கும் பீதியை முற்றிலும் கட்டுப்படுத்த  வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர்  எச்சரிக்கை விடுத்தார்.   வைரஸ் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் இச்சூழலில் பொருளாதார மற்றும் சமூகக் கட்டுப்பாட்டையும்  எப்போதும்  போல் இருக்கவைக்க முயற்சிகள் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் .  இந்நிலையில் வைரஸை  கண்டுபிடித்த டாக்டர் லீ வென்லியாங்ஸை மிரட்டியது மற்றும் அவரது  மரணம் அந்நாட்டு அரசு மீது மக்களை கொந்தளிப்படைய செய்துள்ளது. மேலும் தெடர் உயிரிழப்புகளால் அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.