கொரோனா வைரஸை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என  சீன அரசு  கைவிரித்துள்ளது ,  நொடிக்கு நொடி  மிக வேகமாக பரவி வரும் இந்த  வைரஸ் தாக்குதலுக்கு  பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீன அரசு இவ்ஙாறு கூறியுள்ளது .  எப்போதும் இல்லாத அளவிற்கு சீனா வைரஸ் காய்ச்சலுக்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .  கொரோனா என்ற இந்த புதிய வைரஸ் மக்களை மிக மிக வேகமாக தாக்கி வருகிறது இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் முற்றிலும் நோய் எதிர்ப்பு சக்தி  குறைந்து மரணத்தை தழுவும் நிலை சீனாவில் ஏற்பட்டுள்ளது  .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின்  வூகான் நகரில் சட்டவிரோதமாக விற்கப்படும் சுகாதாரமற்ற இறைச்சியில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

இதனால்  வூகான் உள்ளிட்ட பதினெட்டு நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது ,  இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை  56 ஆக உயர்ந்துள்ளது சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்நிலையில் சுமார் 1300 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை கட்டிமுடிக்க சீனா திட்டமிட்டு அதற்கான வேலையில் மிக வேகமாக ஈடுபட்டுவருகிறது.   இது குறித்து மேலும் தெரிவித்துள்ள சீன அதிபர் ஜி ஜின் பிங் ,  கொரோனா வைரஸால் சீனாவில் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது .  இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கு தெரியவில்லை இதில் நோயை கட்டுப்படுத்த அரசு முடிந்த அளவில் போராடி வருகிறது .  அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது .  இந்த நோய் உருவாகும் காரணம் குறித்தும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்றார்,  

தொடர்ந்து பேசிய அவர் ,   ராணுவ மருத்துவர்களும் நோயாளிகளை கவனித்து வருகின்றனர் ,  மொத்தத்தில் இந்த வைரஸ் பரவுவதை அரசால் தடுக்க முடியவில்லை இதை எப்படி கட்டுபடுத்துவது என்றும் எங்களுக்கு தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார் . சீனாவில் இந்த கைவிரிப்பை அடுத்து அந்நாட்டில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.   இந்நிலையில் சீனாவில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார் .  அதில் தெரவித்துள்ள அவர்,  சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணத்தில் படிக்கும் இந்திய மாணவர்களை தொடர்பு கொண்டுள்ளோம் ,  அவர்கள் உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது அவர்களுக்கு தேவையான உதவிகள் , வசதிகள் தூதரகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது .   அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்