சீனா மற்றும் பிரிட்டன் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்  அரிய குகை மண்டபம் , சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தெற்கு மாகாணமான குவாங்ஸி ஜுவாங்கில், சுமார் 100 மீட்டர் அகலத்தில், 118 மீட்டர் ஆழத்தில் இந்த குகை அமைந்துள்ளது. சுற்றிலும் குன்றுகள் நிறைந்த இந்த குகையை, 3 டி தொழில்நுட்பத்துடன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்...  இயற்கை எழில்மிகுந்த இந்த குகையை சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த குகையின் காட்சிகள் பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.