Asianet News TamilAsianet News Tamil

முடிவுக்கு வரும் பிரெக்சிட் விவகாரம்...! பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு...!

28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

britan started to celebrate
Author
Britain, First Published Jan 26, 2020, 5:04 PM IST

முடிவுக்கு வரும் பிரெக்சிட் விவகாரம்...! பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு...!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்டார்.

28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக கொண்டு வரப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தத்தை எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி எம்பி.க்களின் எதிர்ப்பால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனது. இதனால், அப்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

britan started to celebrate

அடுத்ததாக பிரதமரான போரிஸ் ஜான்சனாலும், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், தனக்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக,  நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மீண்டும் பொதுத்தேர்தலை சந்தித்தார். இந்த ஒப்பந்தத்தை முன்வைத்தே அவர் பிரசாரமும் செய்தார். அதில், அவருடைய பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) அதிக பெரும்பான்மையுடன் கடந்த மாதம் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. இதையடுத்து, பிரெக்சிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 22ந் தேதி தாக்கல் செய்தார்.

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனவரி 23ந் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். 
britan started to celebrate

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான முறையான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார். லண்டனில் டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் அவர் கையெழுத்து போட்டார்.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தை பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் இருந்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கொண்டு வந்தனர். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதை இங்கிலாந்து வரலாற்றில் புதிய அத்தியாயம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் வர்ணித்தார்.

இந்த ஒப்பந்தம், மீண்டும் பிரசல்ஸ் எடுத்துச்செல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் 31-ந் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது. இதைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios