பிரெக்ஸிட் விவகாரம்... பதவியை ராஜினாமா செய்கிறார் இங்கிலாந்து பிரதமர்..!

பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஜூன் 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நாடாளுமன்ற ஒப்புதலை பெற முடியாததால் தெரசா மே இந்த முடிவை எடுத்துள்ளார்.

Brexit crisis...Theresa May resigns as UK prime minister

பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஜூன் 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நாடாளுமன்ற ஒப்புதலை பெற முடியாததால் தெரசா மே இந்த முடிவை எடுத்துள்ளார். 

2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை தோல்வியடைந்தது. Brexit crisis...Theresa May resigns as UK prime minister

இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள தெரசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3-ம் தேதி 4-வது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்திருந்தார். இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும். Brexit crisis...Theresa May resigns as UK prime minister

இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் அமைச்சர் ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ஜூன் 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் உடனடியாக விலகுவதாகவும் தெரசா மே கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios