அதிகரிக்கும் மருத்துவமனையின் அராஜகப்போக்கு...! பிறந்த குழந்தையை தாயிடம் இருந்து 5 மாதம் பிரித்துவைத்த அவலம்..! பணத்தை வசூல் செய்து பில் கட்டிய வளைதளவாசிகள்..!
டெலிவரிக்கு உண்டான பில் தொகையை செலுத்த பணம் இல்லாததால் பிறந்த குழந்தையை 5 மாதங்கள் தாயிடம் இருந்து மருத்துவமனை தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபான் என்ற நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
அந்த குழந்தைக்கு ஏஞ்சல் என பெயரிடப்பட்டது. அந்தக் குழந்தை 35 நாட்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து டிஸ்சார்ஜ் ஆகும் தினத்தில் மருத்துவமனை கட்டணமாக ரூ.2.5 லட்சம் கட்டினால் தான் குழந்தையை தருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அந்த தொகை இல்லாததால் சோனியாவிடம் இருந்து குழந்தையை மருத்துவமனை பிரித்து வைத்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி பரப்பின. இதையடுத்து மருத்துவனை டீன் கைது செய்யப்பட்டார்.
மேலும் சமூகவலைத்தளவாசிகள் பணத்தை திரட்டி அந்த தாய்க்காக மருத்துவமனையில் பில் கட்டினர்.
பின்னர் ஒருவழியாக 5 மாதங்கள் கழித்து தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து சோனியா ஓகோம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கைது செய்யப்பட்ட டீனை போலீசார் விடுதலை செய்தனர்.