மீண்டும் வசமா சிக்கிய டொனால்டு டிரம்ப்.... பிரபல பெண் எழுத்தாளர்க்கு செக்ஸ் டார்ச்சர்?

அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பிரபல எழுத்தாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
 

Before the White House, Trump faced an array of sexual misconduct accusations. As president, he faces another

அமெரிக்‍க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பிரபல எழுத்தாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரான ஜீன் கரோல், அதிபர் டிரம்ப் தன்னிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நியூயார்க் பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 75 வயதாகும், ஜீன் கரோல் எழுதி உள்ள கட்டுரையில், 1990ம் ஆண்டு மத்தியில் டிபார்மென்டல் ஸ்டோர் ஒன்றின் உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந் டிரம்ப், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார். டிரம்ப் பற்றிய இது போன்ற பல விஷயங்களை, தான் விரைவில் வெளியிட உள்ள "hideous men" என்ற புத்தகத்தில் எழுதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், எழுத்தாளர் ஜீன் கரோலின் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜீன் கரோல் என்ற பெண்மணியை தனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். இது, ஆதாரம் இல்லாத தவறான குற்றச்சாட்டு என்றும் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் மறுப்பிற்கு ஜீன் கரோல் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. 

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, 12க்கும் மேற்பட்ட பெண்கள், டொனால்டு டிரம்ப் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறினர். அத்தனை புகாரையும் மறுத்த டிரம்ப், அவர்கள் அனைவரும் பொய் சொல்வதாக கூறியது குறிப்பிடத்தக்‍கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios