ஓர் பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கும் மசோதா பார்லிமெண்டில் தாக்கல்... தனி நபர் சுதந்திரம் பேண ஆஸி. எம்பி.க்கள் கோரிக்கை!

Australia has voted now the same sex marriage bill goes to Parliament for debate
Australia has voted now the same sex marriage bill goes to Parliament for debate


ஓர் பாலின திருமணத்தை சட்ட பூர்வமாக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்புக்கு 61.6% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

12.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாடு முழுவதும் இருந்து இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 79.5% ஆகும். நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பகுதியும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டன. இதில் பெரும்பான்மையினர் ஆம் என்று பதில் கொடுத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கிறிதுஸ்மஸ் பண்டிகை தொடங்கும் முன் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு ஓர்பாலின திருமணம் சட்டபூர்வம் ஆக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் உறுதி அளித்துள்ளார்.

இந்த மசோதாவை அறிமுகம் செய்த ஆளும் கட்சி எம்.பி.க்கு, சக எம்.பி.கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். அத்துடன் கட்சி பாகுபாடு இன்றி மசோதாவுக்கு ஆதரவும் தெரிவித்தனர். அதே நேரம் தனிநபர் சுதந்திரம் தொடர்பாக மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என எம்.பி.கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மசோதாவை தாக்கல் செய்த ஸ்மித்தும் ஓரினச் சேர்கையாளர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios