17 வயது சிறுவனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டு அந்த விவகாரம் பிரச்சனையானதை தொடர்ந்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து நடிகை செட்டில் செய்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆசியா அர்ஜென்டோ. தற்போது இவருக்கு 42 வயதாகிறது. கடந்த ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆசியா அர்ஜென்டோ.

 

தான் துவக்க காலத்தில் நடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது வெயின்ஸ்டீன் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக அர்ஜென்டோ கூறியிருந்தார். இந்த நிலையில் ஆசியா அர்ஜென்டோ மீதே 17 வயது சிறுவனை தொடர்பு படுத்தி பாலியல் புகார் எழுந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவுக்கு 37 வயதாக இருந்த போது கலிபோர்னியாவில் உள்ள ஓட்டலில் வைத்து அப்போது 17 வயதே ஆன சிறுவன் பென்னட்டுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக புகார் எழுந்தது. ஆசியா தன்னுடன் நடந்து கொண்ட விதத்தால் மன ரீதியாக தான் பாதிக்கப்பட்டதாக சிறுவன் பென்னட் வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசியா இனி இது போல் தவறு நடக்காது என்கிற உறுதி மொழியுடன் இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணம் கொடுத்து பென்னட்டை அமைதிப்படுத்திய தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகையோ சிறுவனை பாலியல் ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டது ஹாலிவுட்டில் உள்ள நடிகைகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து ஆசியா தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்காம அமைதி காத்து வருகிறார்.