இந்தியாவுக்கு  ஆயுதங்களை விற்பனை செய்வதைவிட  அந்த நாட்டுடன் இணைந்து பருவ நிலை மாற்றத்தை  எதிர்த்து போராடலாம் என அமெரிக்க  அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்  பெர்னி சாண்டர்ஸ்  அறிவுரை வழங்கி உள்ளார் .  இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஆளுங் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்  மீண்டும்  நிறுத்தப்படுகிறார் .  ஜனநாயக கட்சி சார்பில் 50 மாகாணங்களில் கட்சி அளவில் தேர்தல் நடத்தி வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்,  அவர்களில் வெற்றி பெறும் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் , இந்த வகையில்  நிவேடா மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில்  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ்   தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  அவரது குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ,  அப்போது எரிசக்தி மற்றும் பாதுகாப்புத்துறை  உள்ளிட்ட துறைகள் குறித்து இந்தியாவுடன் அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டது.   அதில் சுமார்  21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது ,  இதில் அமெரிக்காவிடமிருந்து அதி தொழில் நுட்பத்துடன் கூடிய ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தம் நேற்று  ஒரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது கையெழுத்தானது .  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெர்னி சாண்டர்ஸ், 

இந்தியா வந்திருந்த அதிபர் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார் ,  அதாவது அகமதாபாத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப்,  அமெரிக்காவின் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு விற்கப்படும் ,  இந்தியாவுடன் பாதுகாப்புத்துறையில் இணைந்து செய்யப்படுவோம் என்று தெரிவித்திருந்தார் இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டரில் 21 ஆயிரத்து 300 கோடி  மதிப்புக்கு ரேதியான், போயிங் மற்றும் லாக்ஹீட்  ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடலாம் .  காற்று மாசுவை  ஒழிக்க பாடுபடலாம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பணிகளை உருவாக்கலாம் நமது கோள்கைகளை பாதுகாக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் .