சிரியா போரில் குறிவைக்கப்படும் குழந்தைகள்...! பள்ளி மீது தாக்குதல்...! கொடூரக் காட்சிகள்...!
சிரியாவில் உள்ள ஒரு பள்ளியைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012 ஆம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 7 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. சிரியா ராணுவம், ரஷ்யா உள்ளிட்ட ஆதரவு நாடுகளின் உதவியுடன் அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் நகரங்கள்மீது தாக்குதல் நடத்திவருகிறது.
சிரிய அரசு ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 3 லட்சம் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சென்ற மாதம் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் குழந்தைகளே அதிகம். இந்த குழந்தைகளின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிரியாவுக்கு எதிராக எழுந்த கண்டனத்தை அடுத்து, 30 நாள்கள் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது., இந்த நிலையில் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவின் அர்பின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தைக் குறிவைத்து, வான் வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 15 குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து சிரியா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளருக்கும் இடையே நடந்து வரும் இந்த போரில் அதிகமாக குறிவைத்து தாக்கப்படுவது குழந்தைகளே...! படுகாயம் அடைந்தவர்களும் குழந்தைகளே...!